பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 263

“குனியும் வான்முகத்தான் - கண்ணன்

குலவி நெற்றியிலே

இனிய பொட்டிடவே - வண்ண

மியன்ற சவ்வாதும்

“೧೫rira- முடிப்பதற்கே - மணம்

கூடு தைலங்களும்

வண்டு விழியினுக்கே - கண்ணன்

மையும் கொண்டு தரும்.

“தண்டைப் பதங்களுக்கே - செம்மை

சார்ந்து செம்பஞ்சு தரும்

பெண்டிர் தமக்கெல்லாம் - கண்ணன்

பேசரும் தெய்வமடி”

"குங்குமம் கொண்டுவரும் - கண்ணன்

குழைத்து மார்பெழுத சங்கையிலாத பணம் - தந்தே

தழுவிமையல் செய்யும்

"பங்க மொன்றில்லாமல் - முகம்

பார்த்திருந்தாற் போதும்

மங்களமாகுமடீ - பின்னோர்

வருத்தமும் இல்லையடி’ என்று

பாடி நம்மை மகிழ்விக்கிறார்.