பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி

கண்ணம்மா

கண்ணனைக் கண்ணம்மாவாகக் கற்பித்துப் பாடிய பெருமை பாரதிக்கே உண்டு. கண்ணம்மாவைச் செல்லக் குழந்தையாக, அன்புக் காதலியாக, அழிவில்லாக் குல தெய்வமாகப் பாரதி பாடி

மகிழ்கிறார்.

கண்ணம்மா - என் குழந்தை

1.

சின்னஞ் சிறுகிளியே - கண்ணம்மா

செல்வக் களஞ்சியமே என்னைக் கலிதீர்த்தே - உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்”

“பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமே அள்ளியணைத்திடவே - என் முன்னே

ஆடிவரும் தேனே'

“ஓடி வருகையிலே - கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஆடித்திருதல் கண்டால் - உன்னைப்போய்

ஆவிதழுவுதடி"

" உச்சிதனை முகந்தால் - கருவம்

ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் - புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடி"