பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 265

5. “கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்

கள்வெறி கொள்ளுதடி உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா

உன்மத்த மாகுதடி”

6. “சற்றுன்முகம் சிவந்தால் - மனது

சஞ்சலமாகுதடி நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு

நெஞ்சம் பதைக்குதடி”

7. “உன் கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்

உதிரம் கொட்டுதடி என் கண்ணில் பாவையன்றோ - கண்ணம்மா

என்னுயிர் நின்றதன்றோ?

8. “சொல்லு மழலையிலே - கண்ணம்மா துன்பங்கள் தீர்த்திடுவாய் முல்லைச் சிரிப்பாலே - எனது

மூர்க்கம் தவிர்த்திடுவாய்

9. “இன்பக் கதைகள் எல்லாம் - உன்னைப் போல்

ஏடுகள் சொல்வதுண்டோ? அன்பு தருவதிலே - உனை நேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?

10. “மார்பில் அணிவதற்கே - உன்னைப் போல்

வைரமணிகளுண்டோ?