பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

என்று பாடுகிறார். இன்னும் நமக்கு ஏற்படும் தீதுகளைப் போக்கும் மருந்தாகவும், நமது நலன்களைப் பெருக்கும் அமுதமாகவும், சுவைமிக்க கட்டிகளாகவும், அறுசுவை மிக்க ஆகாரமாகவும், நெய்ச்சுவைத் தேறலாகவும் கனியாகவும் பாலாகவும் கண்ணனைக் கற்பித்துப் பாடுகிறார்.

மனிதனுக்குச் சில நேரங்களில் எத்தனையோ கேடுகளும் தீதுகளும் நோய்களும் தீவினைகளும் சேர்கின்றன. அவைகளைத் தடுக்கவும் தீர்க்கவும் மருந்துகள் தேவைப்படுகின்றன. அத்தகைய நோய் தீர்க்கும் மருந்தாக இருக்கிறான் கண்ணன். நோய் தீர்ந்தால் மட்டும் போதாது. நோய் வாய்ப்பட்ட சமுதாயமும் தீதுகள் வாய்ப்பட்ட சமுதாயமும் பலவீனப்பட்டிருக்கும். நோய் தீர்ந்த பின்னரும் நோயின் விளைவால் ஏற்பட்ட பலவீனம் தொடரும். அந்த பலவீனத்தைப் போக்க நல்ல சத்துள்ள உணவு தேவைப்படுகிறது. எனவே அமுதமாக, அறுசுவை அடிசிலாக (உணவாக) நெய்யாகக் கனியாகப் பாலாகக் கண்ணனைக் காண்கிறார் ஆழ்வார்.

அச்சுதன் அமலன் என்கோ!

    அடியவர் வினை கெடுக்கும்

நச்சுமர மருந்தம் என்கோ!

   ்நலம் கடல் அமுதம் என்கோ!

அச்சுவைக்கட்டி என்கோ!

    அறுசுவை அடிசில் என்கோ!

நெய்ச்சுவைத் தேறல் என்கோ!

    கனியென்கோ பாலென்கோ !

என்று பாடுகிறார்.

பால் எனப்படுவது ஆவின் பால் என்பது மட்டுமல்ல. வேதத்தின்