பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி

என்று, எளிய பதங்களில், சின்னச் சின்ன வரிகளில், கனிவான கருத்துக்களில், காதுக்கினிய இசை ஒசையுடன், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வார்த்தைகளில் அற்புதமாக அமைந்துள்ள பாதியின் இந்தப் பாடல்களை இல்லந்தோறும் இசையுடன் சேர்த்து

சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப் போல்

செல்வம் பிறிதுமுண்டோ?

நாம் பாடவேண்டும், பாடி மகிழவேண்டும்.

கண்ணம்மா - என் காதலி

1.

“கட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா

சூரிய சந்திரரோ?

வட்டக் கரியவிழி - கண்ணம்மா

வானக்கருமை கொல்லோ?

பட்டுக் கருநீலப் - புடவை

பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்

நட்சத்திரங்களடி

"சோலை மலரொளியோ - உனது

சுந்தரப் புன்னகைதான்

நீலக்கடல் அலையே - உனது

நெஞ்சில் அலைகளடீ,

கோலக் குயிலோசை - உனது

குரலின் இனிமையடி