பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி > 4 ں

என்று பாரதி காதலுக்குத் தனிப் பெருமையும் வடிவமும் கொடுத்து ஒருதனி இலக்கணமும் வகுத்து, வாழ்க்கை அனுபவத்தோடு இணைத்துப் பாடியுள்ளார்.

"சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை” என்னுமொரு அழகான கருத்துச் சொற்றொடர் தமிழ் இலக்கியத்திற்கும் உலக இன்பச் சுவை இலக்கியத்திற்கும் பாரதி அளித்துள்ள தனிப் பெரும் பங்களிப்பாகும்.

கண்ணம்மா - என் காதலி

மற்றும் ஒரு பரிமாணம்

“பாயுமொளி நீயெனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

தோயுமது நீயெனக்கு! தும்பியடி நானுனக்கு!

வாயுரைக்க, வருவதில்லை! வாழி நின்றன்

-- மேன்மையெல்லாம்!

துாய கடர் வானொளியே சூறையமுதே! கண்ணம்மா!

"வானமழை நீயெனக்கு! வண்ணமயில் நான் உனக்கு!

பானமடி நீயெனக்கு, பாண்டடி நானுனக்கு ஞானவொளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்!

ஊனமறு நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா!

வினையடி நீயெனக்கு மேவுவிரல் நானுனக்கு, பூணும் வடநீயெனக்கு, புதுவயிர நானுனக்கு காணும் இடம் தோறுநின்றன் கண்ணின் ஒளிவீசுதடி

மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா!