பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 271

“வெண்ணிலவு நீயெனக்கு! மேவுகடல் நான்உனக்கு!

பண்ணுகதி நீயெனக்கு ! பாட்டினிமை நானுனக்கு !

எண்ணி எண்ணிப்பார்த்திடில் ஒர் எண்ணமில்லை,

நின்சுவைக்கே !

கண்ணின் மணிபோன்றவளே கட்டியமுதே கண்ணம்மா!

“வீசுகமழ் நீயெனக்கு விரியுமலர் நானுனக்கு !

பேசுபொருள் நீயெனக்கு பேனுமொழி நானுனக்கு!

நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்!

"ஆசைமதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீயெனக்கு, காந்தமடி நான் உனக்கு !

வேதமடி நீயெனக்கு, வித்தையடி. நானுனக்கு !

போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே!

நாதவடிவானவளே! நல்லவுயிரே கண்ணம்மா!

“நல்லஉயிர் நீயெனக்கு நாடியடி நானுனக்கு!

செல்வமடி நீயெனக்கு சேமநிதி நானுனக்கு !

எல்லையற்ற பேரழகே! எங்கு நிறைபொற்சுடரே

முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே !

கண்ணம்மா!

“தாரையடி நீஎனக்கு தண்மதியம் நானுனக்கு!

வீரமடி நீயெனக்கு ! வெற்றியடி நானுனக்கு !

தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கு மின்பமெல்லாம்

ஒருருவமாய்ச் சமைத்தாய் உள்ளமுதே! கண்ணம்மா!