பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

உலக பெருபடிவம்

பயனும் பாலேயாகும். எனவே ஆழ்வார் சடகோபனார் கண்ணனை நான்கு வேதப் பயனாகவும், சமய நீதியின் நூல்களாகவும், கேள்வி ஞானங்களாகவும் இசையாகவும் வினையின் (நற்செயல்களின்) பயன்களாகவும் கண்டு உவகை கொள்கிறார். வினையும் வினையின் பயனும் நமது தத்துவ ஞானத்தின் கூறுகளாகும் எனவே!

“பாலென்கோ நான்கு வேதப்

   பயன் என்கோ! சமய நீதி

நூலென்கோ நுடங்கு கேள்வி

   இசையென்கோ! இவற்றுள் நல்ல

மேலென்கோ! வினையின் மிக்க

   பயனென்கோ! கண்ணன் என்கோ!

மாலென்கோ மாயன் என்கோ!

வானவர் ஆதியையே”

என்று நெஞ்சுருகப் பாடுகிறார்.

கண்ணனை ஆழ்வார் வானவர் ஆதி எனக் குறிப்பிடுகிறார். வானவர் என்றால் மேலானவர், மேன் மக்கள் என்றும் பொருள் கொள்ளலாம் மேலானவர்களின் ஆதியாக ஆதிமூலமாகக் கண்ணனைக் காண்கிறார்.

"வானவர் ஆதி என்கோ!

    வானவர் தெய்வம் என்கோ!

வானவர் போகம் என்கோ!

வானவர் முற்றுமென்கோ !