பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 279

சோதிக்கு சோதியப்பா - என்றன்

சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்

மாதிக்க வெளியினிலே - நடு

வானத்தில் பறந்திடும் கருடன்மிசை

சோதிக்குள் ஊர்ந்திடுவாய் - கண்ணா

சுடர்ப் பொருளே பேரடற் பொருளே !

“கம்பத்தில் உள்ளானோ - அடா

காட்டுன்றன் கடவுளைத் துணிடத்தே

வம்புரை செயுமூடா என்று

மகன்மிசை யுறுமியத் துணுதைத்தான்

செம்பவிர் குழல் உடையான் - அந்தத்

தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்

நம்பி நின்னடி தொழுதேன் - என்னை

நானழியாதிங்கு காத்தருள்வாய்”

“வாக்கினக் கீசனையும் - நின்றன்

வாக்கினில் அசைத்திடும் வலிமையினாய்

ஆக்கினைக் கரத்துடையாய் - என்றன்

அன்புடையெந்தை, என்னருட் கடலே

நோக்கினிற் கதிருடையாய் - இங்கு

நூற்றுவர் கொடுமையைத் தவிர்த் தருள்வாய்

தேக்கு நல்வானமுதே - இங்கு

சிற்றிடையாய்ச்சியில் வெண்ணெய் உண்டாய்,