பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 281

பாரதக் கதையை, ஒரு மாபெரும் இதிகாசமாக எழுதிய வியாசபகவான் தான் பாகவதப் பெருநூலையும் எழுதியவராகும். பாகவதம் திருமாலின் அவதாரப் பெருமைகளை விவரிக்கும் பெரு நூலாகும். அதில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றியும் அவ்வதாரப் பெருமைகளைப் பற்றியும் மிக விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. திருமாலின் திரு அவதாரங்களில் கிருஷ்ணாவதாரத்தைப் பரிபூரணாவதாரம் என்று பெரியோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கிருஷ்ணாவதாரம் மகாபாரதக் கதையுடனும் இணைந்தது. ஆயினும் யமுனைக் கரையில் கண்ணன் ஆற்றிய அருஞ்செயல்கள் அதிசயிக்கத்தக்கவை. நமது உள்ளத்தைக் கொள்ளை கொள்பவை. உள்ளத்தை அள்ளுபவவை. தேவகியையும் வசுதேவரையும் கம்சன் சிறையில் அடைத்து, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைக் கொல்வதும், கடைசியாகக் கண்ணன் சிறைக்குள் பிறந்ததும், அக்குழந்தை அங்கிருந்து தப்பி கோகுலத்திற்கு வந்ததும், அங்கு அசோதையின் குழந்தையாக அவ்வாயர் பாடியில் வளர்ந்ததும் அங்கு கண்ணன் நடத்திய லீலைகள், அருஞ்செயல்கள் பலவும் ஆழ்வார்களின் உள்ளங்களை உலுக்கியுள்ளன.

கண்ணபிரானின் அந்த அருஞ்செயல்களைப் பற்றி ஆழ்வார்கள் தங்களுடைய பல பாடல்களிலும் திரும்பத் திரும்பப் போற்றிப் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். அவைகள் அனைத்தும் பக்திச் சுவைமிக்கவை.

கண்ணனைப் பற்றி ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர்ந்தவன் பேய் முலை நஞ்சுண்டவன், கள்ளச் சகட முதைத்தவன், மாவாய்ப் பிளந்தவன், புள்ளின் வாய்க்கீண்டான், பொல்லா அரக்கரைக் கிள்ளியவன், மல்லரை மாட்டியவன், மருதம் சாய்த்தவன், கன்று குணிலா வெறிந்தவன், கஞ்சனை வீழ்த்தியவன், கஞ்சனுக்கு நஞ்சானவன், குன்று குடையாய் எடுத்தவன், காளிங்கன்மீது களிநடம் புரிந்தவன், உலகம்