பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி .” H.”

உண்டவன், உலகம் உமிழ்ந்தவன், வெண்ணை திருடி உண்டவன், கற்றினம் மேய்த்தவன், ஆவினம் காத்தவன் என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். இவையெல்லாம் வெறும் சொற்களும் சொற்றொடர்களும் அல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றப் பின்னணி கொண்ட அருஞ்செயலாகும். அதிசயிக்கத் தக்க வீரச் செயலாகும். அவதாரக் கடமை மிக்க பெருஞ் செயலாகும். அவை ஒவ்வொன்றும் நல்லோரைக் காப்பதும் தீயோரை மாய்ப்பதுமான கடமைகளை நிறைவேற்றிய அருஞ்செயல்களாகும். அவை ஒவ்வொன்றும் காரண காரியங்களோடு கூடிய சமுதாயச் செயல்பாடுகளுமாகும்.

கண்ணபிரானின் இந்த அவதாரச் சிறப்புக் கதைகள் எல்லாம் பாரத நாட்டின் ஒவ்வொரு விட்டிலும் நடமாடும் கதைகளாகும். நமது அன்புத் தாய்மார்களின் உள்ளத்தில் குடிகொண்டுள்ள நிரந்தரக் கதைகளாகும்.

கம்சன், சிசுபாலன், முதலிய பல கொடுங்கோல் மன்னர்களின் கொடுமைகள் அனைத்தையும் எதிர்த்து கோகுலங்களையும் வட மதுரை மண்டலத்தையும் காத்தவன் கண்ணன். இவையெல்லாம் பாகவதப் பெருநூலின் குறிப்புகள். ஆழ்வார்களின் எண்ணற்ற பல பாடல்களிலும் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய பல குறிப்புகளையும் காண முடிகிறது. -

அடுத்தப் படியாகக் கண்ணனுக்குப் பாரதக் கதையுடன் இருந்த தொடர்பு இணைப்புகளில் ஏற்பட்டிருந்த பல நிகழ்ச்சிகளில், பாரதப் போரில் கண்ணன் ஆற்றிய அருஞ்செயல்களை ஆழ்வார்கள் பலரும் தங்களுடைய பக்திப் பாசுரங்களில் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாகப் பாண்டவர்களுக்காகக் கண்ணன் தூது சென்றது, பூபாரம் தீர்க்க பாரதப் போரை நடத்தியது, சிந்து மன்னன் ஜயத்திரதனைக் கொல்வதற்காக, தனது சக்கரத்தை ஏவி சூரியனை மறைத்துப் பின் அதைத் திரும்பப் பெற்றது, விறல் வியூகம் விள்ள சிந்துக்கோன் விழவூர்ந்தவன், பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரத்து