பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி - 284

செம்மைப் பொருள் செரியப் பாரினிற் சொன்ன இராமானுசனைப்

பணியும் நல்லோர் சீரினிற் சென்று பணிந்தது என்னாவி

யும் சிந்தையுமே”

என்று திருவரங்கத் தமுதனார் அருளிச் செய்துள்ள இராமனுஜ நூற்றந்தாதியில் கூறப்பட்டுள்ளது.

ஆழ்வார்களின் அரிய பாசுரங்களில் பகவான் கண்ணன் கூறிய பகவத் கீதையைப் பற்றிய நேரடியான குறிப்பு தெளிவாகத் தெரியப்படாவிட்டாலும் ஆழ்வார் பெருமக்களின் பாசுரங்களில் காணப்படும் தத்துவஞான நிலை மிகவும் தெளிவானதாகும். ஆழ்வார்களின் தத்துவஞானம் அவர்களுடைய பக்தி தத்துவத்தோடு இணைந்ததாகும். பாகவத்தின் தொடர்ச்சியை அதன் கர்மயோகத்தின் தொடர்ச்சியை ஆழ்வார்களின் பாசுரங்களில் அதன் தத்துவ நிலையிலும் பக்தி யோகத்திலும் நாம் தெளிவாகக் காண முடிகிறது.

பாரதியின் பாடல்கள் கண்ணபிரானின் பகவத் கீதா வாக்கியங்களைப் பெரிதும் ஆதாரப் பட்டு நிற்பதைக் காண்கிறோம். பாரதி பகவத் கீதையைப் பற்றி நேரடியாகவே குறிப்பிடுகிறார். அவருடைய பாடல்களின் எந்தத் தொகுதியை எடுத்துக் கொண்டாலும் அதில் கீதையின் சாரத்தை அதன் அடிச்சுவடுகளைக்

ԵETE մյTEl]ITԼՈս

பாரதி தனது தோத்திரப் பாடல்களில் கிருஷ்ணார்ஜுன தரிசனத்தைக் காண்கிறார். தேரின் முன்பாகனாகக் கண்ணன் வீற்றிருப்பதைக் காண்கிறார். கண்ணனைக் கண்டேன், மணிவண்ணனை, ஞானமலையினைக் கண்டேன் என்று நேரடியாகவே பாரதி குறிப்பிடுகிறார்.