பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 285

"வில்லினை எடடா" என்றும், “வாடி நில்லாதே’ என்றும், “ஒன்றுளதுண்மை” என்றும் செய்தலுன் கடனே', அறம் செய்தல் உன் கடனே, அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே என்றும் நேரடியாகவே கீதையின் கருத்துக்களைத் தனது பாடல்களில் பாரதி முன் வைக்கிறார்.

“கர்மயோகம் ஒன்றே - உலகில் காக்குமென்னும் வேதம்” என்று காளி ஸ்தோத்திரம் என்னும் பாடலில் பாரதி குறிப்பிடுகிறார். “முன்னைப் பார்த்தன் கண்ணனிவர் நேரா - என்னை உய்யக் கொண்டருள வேண்டும் - அடி உன்னைக் கோடி முறை தொழுதேன், இனி வையத்தலைமை யெனக் கருள்வாய்” என்று யோக சித்தி என்னும் வரம் கேட்டல் பாடலில் குறிப்பிடுகிறார். பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள், பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள் என்று பாடுகிறார்.

பகைவனுக்கருள்வாய் என்னும் பாடலில் “போருக்கு வந்து அங்கெதிர்த்த கவுரவர் போலுவந்தானமவன் - நன்னெஞ்சே நேருக்கருச்சுனன் தேரில் கசைகொண்டு நின்றதும் கண்ணனன்றோ - நன்னெஞ்சே” என்று பாடுகிறார்.

“பாரத மாதா” என்னும் தலைப்பிலான பாடலில் பாரத மாதாவின் பல பெருமைகளையும் குறித்துப் பாடும்போது “போர்க்களத்தே பரஞான மெய்க் கீதைபுகன்ற தெவருடைவாய் பகை தீர்க்கத்திறந்தரு பேரினள் பாரத தேவி மலர்த்திருவாய்” என்று பாரத மாதாவின் திருவாயைச் சிறப்பித்து கீதையின் பெருமையைப் பாடுகிறார்.

சத்ரபதி சிவாஜி என்னும் தலைப்பிலான பாடலில் முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட என்று தொடங்கி சோர்வடைந்த பார்த்தனுக்கு அறிவுரை கூறியதையும் விவரித்து “பேடிமையகற்று, நின் பெருமையை