பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 286

மறந்திடேல், ஈடிலாப்புகழினாய், எழுகவோ எழுக என்று மெய்ஞானம் நம் இறைவர் கூற” என்று பாரதி குறிப்பிடுகிறார்.

“கிருஷ்ணன் மீது ஸ்துதி” என்னும் பாடலில்,

உண்ணும் சாதிக்குறக்கமும் சாவுமே

நண்ணுறாவண் நன்கு புரந்திடும்

எண்ணரும்புகழ்க் கீதையெனச் சொலும்

பண்ணமிழ் தத்தருள் மழை பாவித்தே"

என்று பாடுகிறார்.

பாரதி தனது சுயசரிதைப் பாடலின் நிறைவாக,

"அறிவிலே தெளிவு, நெஞ்சிலேயுறுதி

அகத்திலேயன் பினோர் வெள்ளம்

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலா நினது பேரருளின்

நெறியிலே நாட்டம், கரும யோகத்தில்

நிலைத்திடல் என்றிவையருளாய்

குறிகுண மேதுமில்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப் பரம்பொருளே’

என்று அற்புதமாக தனது கவிதையில் கீதையின் சாரத்தை தனது

ஆழ்ந்த கருத்துக்களில் குறிப்பிடுகிறார்.

கண்ணன்-என் தோழன் என்னும் பாடலில் “நல்ல கீதையுரைத்

தெனையின் புறச் செய்தவன் கீர்த்திகள் வாழ்த்திடுவேன்” என்றும்