பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 287

பாடி, கண்ணன் பாட்டுகள் முமுவதிலுமே கீதைக் கருத்துக்களின் சாரத்தையே உயிரோட்டமாக வைத்துப் பாடியுள்ளார்.

பாரதியின் கண்ணன் பாட்டுகளின் தொடர்ச்சியாக, பாரதியின் இலக்கியத் தொகுப்பின் மணி மகுடமாக அவருடைய கீதைத் தமி ழாக்கமும், அதற்கு அவர் எழுதியுள்ள முன்னுரையும் அமைந்துள்ளது. பாரதியின் தத்துவ தரிசனம் முழுவதற்கும் கண்ணனின் கீதா வாக்கியங்கள் வழிகாட்டியாக அமைந்துள்ளதைக் காணலாம்.

பாரதியின் மேலான கவித்திறனால் கீதையின் சாரமும் அதன் உயிர்த்துடிப்பான கருத்துக்களும் தமிழ் மக்களிடம் நிலவும் கரிய இருளைப் போக்கும் ஆதவனாகப் பிரகாசித்து ஒளி வீசி வந்திருக்கிறது. பாரதி வாழ்க. பாரதியின் புகழ் வாழ்க! கண்ணன் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க!