பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும்-அ. சீனிவாசன் 288

நூலாசிரியரைப் பற்றி

-

நூலாசிரியர் : அ. சீனிவாசன்

நூலாசிரியர் திரு. அ.சீனிவாசன் ஒரு மூத்த தமிழறிஞர். எழுத்தாளர், பத்திரிகையாளர் முன்னாள் விமானப் படை வீரர். பல நாடுகளிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், விரிவாகச் சுற்றுப் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். தனது பள்ளிப் படிப்பு காலத்திலேயே பன்னிரண்டாவது வயது முதலே பொது வாழ்க்கையில் ஈடுபாட்டு நாட்டுப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசீய காங்கிரஸ், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (1937 ம் ஆண்டில் ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து காங்கிரஸ் சோஷலிஸ்டு கட்சி என்னும் பெயரில் ஒரு தீவிரமான கட்சி என்னும் பெயரில் ஒரு கட்சி அமைத்திருந்தனர். அக்கட்சியினர் காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினர்களாயிருந்தனர்). சுயமரியாதை இயக்கம், பின்னர் பொதுவுடமை இயக்கம் ஆகிய இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றியவர், சிறை வாசம் சித்திரவதை, கொடுமையான போலிஸ் அடக்குமுறைகளுக்கு ஆளாகித் தியாகத் தழும்புகள் ஏறியவர்.

இரண்டாவது உலகப் பெரும் போர் காலத்தில் விமானப் படையில் சேர்ந்து இராணுவப் பயிற்சியும் தகவல் தொழில் நுட்பப் பயிற்சியும் பெற்றவர்.

திரு. அ.சீனிவாசன் முன்னள் இராமநாதபுரம் மாவட்டம் இன்றைய விருதுநகர் மாவட்டம் றுநீவில்லிபுத்துார் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 6-ம் தேதி பிறந்தார். தந்தையார் மெட்ட.வெ.அய்யப்ப நாயுடு, தாயார் மெட்டவெங்கடம்மாள், உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரி, இரண்டு சகோதரர்கள். 1957-ம்