பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நூலாசிரியரைப் பற்றி 289

ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திரு. அ.சீனிவாசன் அவர்களுக்கு திருமணம் ஆயிற்று. மனைவி திருமதி. சீநாகலட்சுமி. குழந்தைகள் இரண்டு பெண்கள், ஒரு ஆண். பெண்களில் மூத்தவர் திருமதி. கேயகீரதி எம்.ஏ.பி.எட்.(தமிழ் திருமணமாகி விட்டது. சென்னையில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இளையவர் குவைதேகி, கர்நாடக இசையில் பட்டம் பெற்று கோவையில் இசை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மகன் ஏ.எஸ்.வாசன் (பழைய பெயர் எஸ். அய்யாசாமி) ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் மற்றும் பி.காம். படிப்பு முடித்தவர். சினிமா துறையில் தயாரிப்பு, நிர்வாகம், இயக்கம் ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறார். அத்துடன் தந்தையார் எழுதி வரும் நூல்களைப் பதிப்பித்து அப்பதிப்பகத்தின் நிர்வாகியாகப் பணியாற்றியும் வருகிறார்.

திரு.அ.சீனிவாசன் மகராஜபுரம் சாத்துர், வத்திராயிருப்பு விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பு முடித்து இந்திய விமானப் படையில் தகவல் தொழில் நுட்பப் பயிற்சியும் பெற்றுள்ளார். அப்போது ஆங்கில மொழியில் தனிப் பயிற்சியும் பெற்றார். அத்துடன் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியத்திலும் குறிப்பாக பாரதி நூல்கள், கம்பராமாயணம், நாலாயிரத்திவ்யப் பிரபந்தம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் ஆழப்படிப்பும் பயிற்சியும் பெற்றார்.

இவ்வாறு தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நல்ல பயிற்சியும் அத்துடன் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளும் அறிந்தவர்.

திரு. அ. சீனிவாசன் 1947-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை சுமார் 52 ஆண்டுகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில், அக்கட்சியின் வட்டாரப் பொறுப்பிலிருந்து, மாவட்ட, மாநில, அகில இந்தியப் பொறுப்புகள் வரையில் பல்வேறு பொறுப்புகளில் குறிப்பாக அமைப்பு நிலை, தொழிற் சங்கத்தலைமை, பத்திரிகைத்துறை, பிரச்சாரத்துறை, பிரசுரத்துறை, கட்சிக்கல்விப் பயிற்சித்துறை, (சித்தாந்தத்துறை) முதலிய பல துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.