பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

26


"தீமையற்ற தொழில்கள் மூலம்தான் ஊனமில்லாத செல்வத்தைச் சேர்க்க முடியும். நல்வழியில் செல்வம் சேர்ப்பதையே ஆழ்வார்களும் அவர் வழியில் பாரதியும் எடுத்துக் கூறியுள்ளனர்.

அத்துடன் சுவர்க்கமும், மோட்சமும் ஊனமில்லாதிருக்க வேண்டும். இதில் சுவர்க்கம் என்பது மகிழ்ச்சியான வாழ்க்கையும், மோட்சம் என்பது முழுமையான விடுதலையுமாகும். அதில் அரைகுறையோ ஊனமோ இருப்பதில் ஆழ்வாருக்கும் பாரதிக்கும் உடன்பாடு இல்லை.

கண்ணனே மும்மூர்த்திகளின் முழுவடிவம் என்றும் சமயசமரசமும் உடன்பாடும் காண்கிறார் ஆழ்வார்.

“ஒளிமணி வண்ணன் என்கோ!

ஒருவனென்றேத்த நின்ற

நளிர் மதிச் சடையன் என்கோ!

நான்முகக் கடவுள் என்கோ!

அளி மகிழ்ந்துலகமெல்லாம்

படைத்தவை ஏத்த நின்ற

களிமலர்த்துளவ னெம்மான்

கண்ணனை மாயனையே!”

என்றும்,

“கண்ணனை மாயன் தன்னைக்

கடல்கடைந்து அமுதம் கொண்ட

அண்ணலை அச்சுதன் தன்னை

அனந்தனை அனந்தன் தன்மேல்

நண்ணி நன்குறைகின்றானை

ஞால முண் டுமிழ்ந்த மாலை