பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

27



எண்ணு மாறறிய மாட்டேன்

யாவரும் எவரும் தானே! ”

எனப் பாடுகிறார். அதைத் தொடர்ந்து கண்ணனை அறிவின் உணர்வு நிலையின் முழுவடிவமாக ஆழ்வார் காண்கிறார். ஆவியும் உயிருமாக அதிலும் பற்றில்லாதவனாகக் கண்ணனைக் காண்கிறார்.

“யாவையும் யவரும் தானாய்

அவரவர் சமயம் தோறும்

தோய்விலன் புலன் ஐந்திற்கும்

சொலப்படான் உணர்வின் மூர்த்தி

ஆவிசேர் உயிரின் உள்ளால்

ஆது மோர் பற்றிலாத

பாவனை அதனைக் கூடில்

அவனையும் கூடலாமே!

என்று பாடி முடிக்கிறார்.

பராங்குச நாயகி தன்னை எம்பெருமானாகவே கருதிப் பேசுவதாகக் கற்பித்துக் கூறும் பாடல்களில் ஆழ்வார் மிகவும் அற்புதமாகக் கடல் வண்ணனின் முழுவடிவத்தைக் காட்டுகிறார்.

"கடல் ஞாலம் செய்தேனும்,
கடல் ஞாலம் ஆவேனும்
கடல் ஞாலம் கொண்டேனும்
கடல் ஞானம் கீண்டேனும்
கடல் ஞானம் உண்டேனும்”