பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

30


ஆகிய அனைத்தும் கடல் வண்ணன் வடிவமும் செயலுமாகும் என்று கண்ணனின் உலகப் பெருவடிவை ஆழ்வார் பெருமான் அகல விரித்துக் காட்டுகிறார்.

ஒப்பிலியப்பன் கோயிலில் குடிகொண்டிருக்கும் சீனிவாசக் கண்ணனின் ஒப்பில்லாத உலக வடிவத்தைப் பற்றி நம்மாழ்வார் பாடும் பாடல்கள் நெஞ்சை நெகிழ்விப்பன.

“நல்குரவும் செலவும்

நரகும் சுவர்க்கமுமாய்

வெல்பகையும் நட்பும்

விடமும் அமுதமுமாய்

பல்வகையும் பரந்த பெரு

மான் என்னை ஆள்வானை

செல்வம் மல்கும் குடித்திரு

விண்ணகர் கண்டேனே! ”

என்று தொடங்கி,

“கண்ட வின்பம் துன்பம்

கலக்கங்களும் தோற்றமுமாய்

தண்டமும் தண்மையும்

தழலும் நிழலுமாய்

கண்டு கோடற்கரிய

பெருமான் என்னை ஆள்வான்”

என்றும்,

" நகரமும் நாடுகளும்

ஞானமும், மூடமுமாய்