பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

35


நீ நிலாய வண்ண நின்னை

யார் நினைக்க வல்லரே?”

எனவும்

“ஆதியாதி யாதிநீயொ

ரண்ட மாதி யாதலால்

சோதியாத சோதி நீ அ

துண்மையில் விளங்கினாய்

வேதமாகி வேள்வியாகி

விண்ணினோடு மண்ணுமாய்

ஆதியாகி யாயமாய

மாயமென்ன மாயமோ?”

எனவும்

" ஊனின் மேய ஆவிநீ

உறக்க மோடு உணர்ச்சிநீ

ஆனில் மேய ஐந்தும் நீ

அவற்றுள் நின்ற துய்மைநீ

வானினோடு மண்ணும் நீ

வளங்கடற் பயனும் நீ

யானும் நீயதமன்றி யெம்பி

நானும் நீ யிராமனே!”

எனவும் மனமுருகிப் பாடியுள்ளார்.

திருமங்கையாழ்வார் தனது பாடலில்,