பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

37


"குன்றமும் வானும் மண்ணும்

குளிர் புனல் திங்களோடு

நின்ற வெஞ்சுடரும் அல்லா

நிலைகளும் ஆய எந்தை”


என்று பஞ்சபூதங்களின் வடிவமாக இறைவனைப் பாடுகிறார்.

திருவிண்ணகர், ஒப்பிலியப்பனைப் பாடும் போது திருமங்கையாழ்வார்,

"நிலவோடு வெயில் நிலவிரு சுடரும்

உலகமும் உயிர்களும் உண்டொருகால்

கலைதரு குழவியின் உருவினையாய்

அலைகடல் ஆலிலை வளர்ந்தவனே,

எனவும்,

பாரெழு, கடலெழு, மலையெழுமாய்ச்

சீர்கெழுமிவ்வுல கேழுமெல்லாம்

ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்றங்

கோரெழுத்தோருரு வானவனே

என்றும்,

கார்கெழு கடல்களும், மலைகளுமாய்

ஏர்கெழும் உலகமும் ஆகி முத

லார்களும் அறிவரு நிலையினை யாய்ச்

சீர் கெழு நான் மறையானவனே

என்றும் பாடி திருமாலின் அருளை வேண்டுகிறார்.

பகலும் இரவும் தானே யாய்ப்

பாரும் விண்ணும் தானேயாய்