பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

38


நிகரில் சுடராய் இருளாகி

நின்றார் ...... என்றும்,


திருவழுந்தூர்ப் பெருமாளைப் பாடுகிறார்.


“பெருநீரும் விண்ணும் மலையும் உலகேழும்

ஒருதார நின்னுள் ஒடுக்கிய நின்னை

யல்லால் ”

என்று திருக்கண்ணபுரத்துப் பெருமானைப் பாடுகிறார்.

திருமங்கையாழ்வார் அருளிச் செய்த நெடுந்தாண்டகப் பாசுரங்களில் எம்பெருமானின் முழு வடிவத்தைக் காட்டிப் பாடுவதைக் காண்கிறோம். அற்புதமான அந்தப் பாடல் வரிகள் திருமாலின் உலகப் பெரு வடிவை நமக்குக் காட்டுகிறது.

"மின்னுருவாய் முன்னுருவில்

வேதம் நான்காய்

விளக்கொளியாய் முளைத்தெழுந்த

திங்கள் தானாய்

பின்னுருவாய் முன்னுருவில்

பிணி மூப்பில்லாப்

பிறப்பிலியாய் இறப்பதற்கே

எண்ணாது எண்ணும்,

பொன்னுருவாய் மணியுருவில்

பூதம் ஐந்தாய்ப்

புனலுருவாய் அனலருவில்

திகழும் ஜோதி