பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

39


தன்னுருவாய் என்னுருவில்

நின்ற எந்தை

தளிர் புரையும் திருவடியென்

தலைமேல வ்வே”

என்றும்,


"பாருருவில் நீரெரிகால் விசும்புமாகிப்

பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற

ஏருருவில் மூவருமே யென்ன நின்ற

இமையவர் தம் திருவுரு வேறெண்ணும் போது

ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ

ஒன்றுமா கடலுருவம் ஒத்துகின்ற

மூவுருவும் கண்ட போதொன்றாம் சோதி

முகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே

என்று பாடுகிறார் இன்னும்,

"திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்,

திரேதைக் கண் வளையுருவாய்த்


திகழ்ந்தானென்றும்,

பெருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்

பெருமானைக் கருநீல வண்ணன் தன்னை,

ஒருவடிவத் தோருரு வென்று உணரலாகா,

ஊழிதோறூழி நின்றேத்தல் அல்லால்

கருவடிவில் செங்கண்ண வண்ணன் தன்னைக்

கட்டுரையே யாரொருவர் காண்கிற்போரே? ”

என்றும்,