பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

43




ஆழ்வார்களின் கவிதைகளும் கருத்துக்களும் பாடல்களும் பாசுரங்களும் தத்துவதரிசனங்களும் அவர்களுடைய பக்தி உணர்வும் பரவசமும் பாரதியிடம் பெரிய அளவில் தங்கள் செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன. தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் அடையாளங்களைப் பிரதிபலிப்புகளைப் பாரதியின் கவிதைகளிலும் கருத்துக்களிலும், தத்துவ தரிசனங்களிலும் நாம் காண முடிகிறது. ஆழ்வார்கள் காலத்தால் முந்தியவர்கள். பாரதி காலத்தால் பிந்தியவர். கால வேறுபாடு மட்டுமல்ல. சூழ்நிலையும் சமுதாய வளர்ச்சி நிலையும் மாறுபட்டவை. புதிய சூழ்நிலைகளுக் கேற்பவும், சூழ்நிலை வளர்ச்சியின் தாக்கங்களாலும் சமுதாய வளர்ச்சியின் புதிய தேவைகளின் கட்டாயத்தாலும், பாரதி, பாரதப் பண்பாட்டு தளத்தில் நின்ற மகாகவி பாரதியார் தனது தரிசனத்தில் திருமாலையும் திருமகளையும், கண்ணனையும் நம்மை அடையாளம் காட்டி அவர் தன்னுடைய கருத்துக்களில் நம்மை ஈடுபடுத்துகிறார்.

பாரதி


பாரதியின் கருத்துப்படி கடமையாவன நான்கு: அவை தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல் என்பதாகும். உலகெலாம் காக்கும் அந்த ஒருவன் யார்?

"விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய், நாராயணனாய், நதிச் சடைமுடியனாய், பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி அல்லா, யெகோவா எனத் தொழுது அன்புறும் தேவரும் தானாய், திருமகள், உகந்த வான் பொருளாம்” என்பது பாரதியின் பாடல். இவையெனைத்தும் திருமாலின் வடிவமே என்பது ஆழ்வார்களின் கொள்கையெனக் கொள்ளலாம். “சொல்லினுக்கரியனாய், சூழ்ச்சிக்கரியனாய்ப் பல்லுருவாகிப் படர்ந்த வான்பொருளை உள்ளுயிராகி உலகம் காக்கும், சக்தியே தானாம் தனிச்சுடர் பொருளாம்,” என்பது