பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

45


பாரதியின் வேண்டுதல்


”திருமாலே பரம்பொருள் என்பது ஆழ்வார்களின் கொள்கை. அத்துடன் எல்லா மூர்த்திகளும் திருமாலின் வடிவமாகவே ஆழ்வார்கள் கண்டார்கள்.

நாரணன் முழு வேழுலகுக்கும்

நாதன் வேதமயன்

காரணம் கிரிசை கருமம்

இவை முதல்வன் எந்தை

சீரணங்கமரர் பிறர்பல

ரும்தொழுதேத்த நின்று

வாரணத்தை மருப்பொசித்த

பிரான் என் மாதவனே!

என்பது திருவாய் மொழியில் நம்மாழ்வார் கூறும் மொழியாகும்


இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

தாயாய் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்

உள்ளொளியாகி உலகெலாம் திகழும்”

“ பரம்பொருளேயோ, பரம் பொருளேயோ!

ஆதிமூலமே! அனைத்தையும் காக்கும்

தேவதேவா, சிவனே, கண்ணா!

வேலா, சாத்தா, விநாயகா, மாடா,

இருளா, சூரியா, இந்துவே, சக்தியே

வாணீ, காளீ, மாமக ளேயோ,

ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ளது

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே