பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

 ஆழ்வார்களும், பாரதியும் என்னும் இந்த நூல் ஒரு புதிய பார்வையில் ஒப்பீட்டு நூலாக எழுதப் பட்டிருக்கிறது. ஆழ்வார்களும் பாரதியும் காலத்தால் வேறுபட்டவர்கள். ஆயினும் பாரதத்தின் பண்பாட்டு தளத்தில் காலூன்றி நின்று இனிய கருத்துள்ள கவிதைகளைப் பாடியவர்கள்.

ஆழ்வார்கள், வேதக் கருத்துக்களையும், உபநிடத தத்துவங்களையும், ஸ்ரீமத் பாகவதத்தின் கதை நிகழ்ச்சிகளையும் முன் வைத்துத் தங்கள் பாடல்களைப் பாடியுள்ளார்கள். பாரதி வேதங்களையும் உபநிடதங்களையும் ஆதாரமாக வைத்தும் ஸ்ரீமத் பாகவதத்தின் கதை நிகழ்ச்சிகளையும், தத்துவங்களையும் முன் வைத்தும், ஆழ்வார்களை வழி காட்டியாகக் கொண்டும், பகவத் கீதையின் மகத்தான தத்துவத்தை உள்ளடக்கியும் தனது கவிதா மண்டலத்தைப் பிரகாசிக்கச் செய்கிறார்.

பாரதம் வேத காலத்தில் பல வேறுவழிபாடுகளையும், மந்திர தந்திரங்களையும், விழாக்களையும், வேள்வி முறைகளையும் கொண்டிருந்தது. உபநிடதங்கள் பஞ்ச பூதங்களையும், பஞ்சேந்திரியங்களையும், அந்த ஐம்புலன்களின் புலனறிதலையும் செயல் பாடுகளையும் ஆதாரமாக வைத்து அறிவின் தத்துவத்தையும் தத்துவ ஞானப் பிரிவுகளையும், இறைமைக் கொள்கைகளையும், பல்வேறு செயல் முறைகளையும், ஆகம விதி முறைகளையும், வழி முறைகளையும் உருவாக்கி வழி காட்டின.

அத்துடன் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் புருடார்த்தங்களும், அவைகளின் செயல் முறைகளும் உருவாக்கப் பட்டும், நீதி நெறிமுறை, அரசியல் நெறிமுறை, சமுதாய நெறி முறைகள், அறநெறி முறைகள், ஒழுக்க நெறி முறைகள், முதலியன