பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

46


வேதச்சுடரே, மெய்யாங்கடவுளே!
அபயம், அபயம், அபய நான் கேட்டேன்
நோவுவேண்டேன் நூறாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்
 உடமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்
வேண்டாதனைத்தையும் நீக்கி
வேண்டியதனைத்தும் அருள்வதுன் கடனே! "

என்பது பாரதியின் கவிதையாகும்.

செஞ்சொல் மறைபொருளாகி நின்ற
தேவர்கள் நாயகனே எம்மானே
எஞ்சலில் என்னுடைய யின்னமுதே
ஏழுலகுமுடையாய்! என்னப்பா
வஞ்ச உருவின் நமன்றமர்கள் “
வலிந்து நலிந்தென்னைப் பற்றும்போது
அஞ்சலை யென்றென்னைக் காக்கவேண்டும்
அரங்கத் தரவணைப் பள்ளியானே!

என்று பெரியாழ்வார் பாடுகிறார்.

இயற்கை சக்திகளைப் பற்றி அவைகளைத் திருமாலின் வடிவமாக ஆழ்வார்கள் பலரும் பலமுறை பாடியுள்ளார்கள். பாரதியும் பலமுறையும் பல இடங்களிலும் இயற்கையின் சக்தியைப் பாடுவதைக் காண்கிறோம்.

"வானமுண்டு, மாரியுண்டு

ஞாயிறும் காற்றும் நல்லநீரும்