பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

47


தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே"

என்று பாரதி தெளிவுபடக் கூறுகிறார்.

பாரதி முருகனைப் பற்றிக் குறிப்பிடும் போது கூட “குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன் அரங்கத்திலே திருமாதுடன் பள்ளி கொண்டான் மருகா,” என்று குறிப்பிடுகிறார்.

"சொல்லடா ஹரியென்ற கடவுளெங்கே சொல்” என்று இரணியன்தான் உறுமிக்கேட்க,

“நல்லதொரு மகன் சொல்வான் தூணிலுள்ளான், நாராயணன் துரும்பிலுள்ளான்”

என்றனன்,

வல்ல பெரும் கடவுளிலா அணுவொன்றில்லை
மகாசக்தியில்லாத வஸ்து இல்லை

என்றும்,

"உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை.
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்,
பயிலும் உயிர் வகைமட்டுமன்றியிங்கு
பார்க்கின்ற பொருள். எல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி, மதி விண்மீன் மேகம்,
மேலும் இங்கு பலபலவாம் தோற்றம் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்,
எழுதுகோலும் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்.”