பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2.உலகப் பெருவடிவம்

50


காயிலே புளிப்பதென்னே?
கனியிலே இனிப்பதென்னே?
நோயிலே படுப்பதென்னே?
நோன்பிலே உயிர்ப்பதென்னே?
காற்றிலே குளிந்ததென்னே?
கனலிலே சுடுவதென்னே?
சேற்றிலே குழம்பலென்னே?
திக்கிலே தெளிந்த தென்னே?
ஏற்றி நின்னைத் தொழுவதென்னே?
எளியர் தன்னைக் காப்பதென்னே?
போற்றினோரைக் காப்பதென்னே?
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?”

என்றெல்லாம் கண்ணபிரானுடைய வடிவங்களையும் அருஞ்செயல்களையும் போற்றிப் போற்றிப் பாடுகிறார்.

“நெரித்த திரைக் கடலில் நின்முகம் கண்டேன்
நீலவிசும்பினிடை நின்முகம் கண்டேன்
திரித்த நுரையினிடை நின்முகம் கண்டேன்
சின்னக் குமுழிகளில் நின்முகம் கண்டேன்,
பிரித்தப் பிரித்த நிதமேக மளந்தே
பெற்றதுன் முகமன்றிப் பிரிதொன்றில்லை
சிரித்த ஒலியினில் உன்கை விலக்கியே
திருமித்தழுவியதில் நின்முகம் கண்டேன்”