பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்

56


சக்கராயுதத்தைக் கையில் கொண்டுள்ள அரங்கா! இன்னம் நீ தூங்கிக் கொண்டிருக்கலாமா? விழித்தெழுந்து வந்து அருள் புரிவாயாக என்று! வேண்டுகிறார் அடிப்பொடி ஆழ்வார்.

சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்
துன்னியதாரகை மின்னொளி சுருங்கி
படரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ
பாயிருள் அகன்றது பைம்பொழில் கமுகின்
மடலிடைக் குறிவண் பாளைகள் நாற
வைகரை கூர்ந்தது மாருதமிதுவோ
அடலொளி திகழ்தரு திகிரியந்தடக்கை
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

என்று அடிப்பொடியார் பாடுகிறார்.

ஆயர்கள் தங்கள் மாடுகளையும் கன்றுகளையும் பத்திக் கொண்டு செல்கின்றனர். அந்த ஆயர்சிறுவர்களின் குழலோசையும் ஆவினங்களின் மணியோசைகளும் திக்கெல்லாம் பரவிக் கொண்டிருக்கின்றன. வயல் வெளிகளில் வண்டுகள் ராகம் பாடிக் கொண்டிருக்கின்றன. இலங்கையர் குலத்தை வாட்டிய அழகனே, வானவர் தலைவா, மாமுனி விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காத்த அயோத்தியின் அரசே இன்னுமா உரக்கம். பள்ளியெழுந்தருளாயே என்று ஆழ்வார் பாடுகிறார்.

மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்
வேங்குழல் ஓசையும் விடை மணிக்குரலும்
ஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை,