பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்


வாட்டிய வரிசிலை வானவர் ஏறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவர் பிரதம்
ஆட்டிய அடுதிறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே

என்று ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.

பறவைகள் ஆர்ப்பரித்தன. வயல் வெளிகளில் எல்லாம், வெளிச்சம்பரவியது. பொழுது புலர்ந்தது. கீழ்த்திசையில் ஒளி பரவியது. கடலொலி ஒசை வண்டுகளின் சப்தமும் எங்கும் பரவியது. உங்களைப் பணிய தேவர்கள் எல்லாம் வந்து புகுந்து குவிந்து விட்டனர். இலங்கை அரசனை வென்று வெற்றி கொண்ட எம்பெருமானே, இன்னுமா உரக்கம், பள்ளியெழுந்தருள் வீராக!

“புலம்பின புட்களும் பூம்பொழில்களின்வாய்
போயிற்றுக்கங்குல் புகுந்தது புலரி,
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்,
களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலம் தொடையல் கொண்டடியிணைப் பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலின் அம்மா!
இலங்கையர் கோன்வழி பாடு செய் கோயில்
எம்பெருமான், பள்ளியெழுந்தருளாயே’

என்று தொண்டரடிப் பொடியாழ்வார் பாடுகிறார்.

சூரியன் தனது தேரில் புறப்பட்டும் உனது கோயில் வாசல் முன் வந்து நிற்கிறான். இறையவரும் அருமுகனும் அவரவர் வாகனங்களில் வந்து நிற்கிறார்கள். தேவர்களும் வசுக்களும் வந்து வாயிலில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். குதிரைகளில் பலரும்