பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்

58


வந்து ஆடலும் பாடலும் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும் வெள்ளம் போல் இக்கூட்டம் உனது கோவில் முன் குவிந்திருப்பதைக் காணாயோ! இன்னும் ஏன் உரக்கம். அரங்கத்தம்மா பள்ளியெழுந்துவா! என்று அழைக்கிறார் அடிப்பொடி ஆழ்வார்.

“இரவியர் மணி நெடுந் தேரோடும் இவரோ?
இறையவர் பதினொரு விடையரும் இவரோ?
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ?
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடாடலும் பாடலும் தேரும்
குமரதண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரையனைய நின் கோயில் முன் இவரோ?
அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே! ”

என்று ஆழ்வார் பாடுகிறார்.

தேவர் கூட்டங்களும் முனிவர்களும் மருதர்களும் இந்திரனும் தனது யானையில் வந்து உனது கோயில் வாசலில் குவிந்திருக்கிறார்கள். இன்னும் சுந்தரர்களும் விச்சாதரர்களும் இயக்கரும் குவிந்து உன்னை வணங்குவதற்காக வந்து காத்திருக்கிறார்கள். அரங்கத்தம்மா, பள்ளியெழுந்து வந்து எனக்கு அருள்புரிவாய்!

அந்தரத்து அமரர்கள் கூட்டங்களிவையோ?
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ?
இந்திரன் ஆனையும் தானும் வந்திவனோ?
எம்பெருமான் உன் கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்கவிச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்