பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப் பாடல்கள்

66


இங்கு கவிச்சக்கரவர்த்தி கம்பனின் காட்சி ஒன்று நினைவு கூறத் தக்கது.

கைகேயி இராமனை அழைத்து,

"ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்கறும் தவம் மேற்கொண்டு
பூழி வெம் கானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி
ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினன் அரசன்”

என்று கூறி வனம் செல்லுமாறு கட்டளையிட்டு விட்டாள்

சடைகள் தாங்கி, தவம் மேற்கொண்டு, கானம் போய்ப் புண்ணியத்துறைகள் ஆடி வரும்படி கூறுகிறாள்.

இராமபிரான் சீதையுடனும், இலக்குவனுடனும் காட்டிற்குச் செல்லும் போது

"தையல் தன் கற்பும் தன் தகவும் தம்பியும்
மையறுகருணையும் உணர்வும் வாய்மையும்
செய்யதன் வில்லுமே சேமம் ஆகக்கொண்டு
ஐயனும் போயினான் அல்லின் நாப்பனே!”

சீதையின் கற்பு, தனது பெருந்தன்மை, தம்பி இலக்குவன், தனது அருங்குணங்களான கருணை நல்லுணர்வு, வாய்மை ஆகியவைகளைத்துணையாகக் கொண்டும் அவைகளுடன் வில்லும் பாதுகாப்புக்கான துணையாகக் கொண்டு இராமபிரான்

நடுஇரவில் காட்டிற்குச் செல்வதற்கான பயணத்தைத் தொடங்கியதாகக் கம்ப நாடர் குறிப்பிடுகிறார்.