பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

71


தாற்காலிகமானது. ஊழ்வினையினாலோ அல்லது நமது பலவீனத்தினாலோ ஏற்பட்ட தூக்கம். அதனால் தான் பாரதியார் ஐந்து பாடல்கள் போதும் என்று அத்தோடு நிறுத்திக் கொண்டார் போலும்.

ஆழ்வாரின் பாடல்கள் பக்தியின் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாகும். பாரதியாரின் பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டவையாகும்.

பாரதியாரின் இந்தப் பள்ளியெழுச்சிப் பாடல்கள் மிகவும் அற்புதமான பாடல்களாக அமைந்துள்ளன. தமிழ்ச்சுவை, தேசபக்த உணர்வு, கருத்துச்செரிவு, அறிவுத்தெளிவும் கூர்மையும் முதலிய அனைத்தும் அடங்கியதாக அமைந்துள்ளது.

பாரதியார் இந்த ஐந்து பாடல்களும் ஐந்து லட்சம் பெறும் ஏன் ஐந்து கோடி பெறும். இந்தப் பள்ளியெழுச்சிப் பாடல்கள் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும். மக்களிடம் விரிவாகப் பரவ வேண்டும்.

பாரத மக்கள் தூக்கத்தில் இருப்பதையே பாரத அன்னை தூக்கத்தில் இருப்பதாகக் கற்பித்துப் பாரதியார் பாடுகிறார்.

அரங்கனின் துயில் அரிதுயில், மோனத்துயில், தியானத்துயில், சிந்தனைத்துயில், யோகத்துயில், யோகம் என்பது எந்த ஒரு செயலையும் ஊன்றி கவனம் செலுத்தி, ஆழ்ந்து மனதைச் செலுத்தி உள்ளத்தையும் சிந்தனையையும் ஒரு முகப்படுத்தி, ஒரு நிலைப்படுத்தி ஒரு வேலையைச் செய்வதாகும். அவ்வாறு ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தைச் செய்யாவிட்டால் அக்காரியம் அவ்வேலை பழுது பட்டு விடும்.

எழுதுவதும், படிப்பதும், சமையல் செய்வதும், சாப்பிடுவதும், கார் ஒட்டுவதும், கடையில் பொருள்களை விற்பனை செய்வதும்,