பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப் பாடல்கள்

72


பாட்டுக்கள் பாடுவதும் நாட்டியம் ஆடுவதும் வயலில் நடுகை நடுவதும், அறுவடை செய்வதும், மரத்தில் காய் பறிப்பதும், வேட்டையாடுவதும், பேசுவதும் இன்னும் மனிதன் செய்யும் அத்தனை செயல்களும் யோகத்தின் பால் பட்டதேயாகும்.

அப்படி இயல்பாகவே நாம் செய்யும் தொழில் அனைத்தும் யோகத்தின் பால்பட்டதாகவே அமைந்துள்ளன. ஆயினும் அப்படிப் பட்ட செயல்களை உணர்வு பூர்வமாகப் பக்தி சிரத்தையுடன் செய்வது அச்செயலில் ஒரு ஈடுபாட்டுடன் மனம் ஒன்றிக் கடமையுணர்வுடன் செய்வது சிறப்பானதாகும். அப்போது அப்பணியும் சீராக அமைகிறது. அதுவே பக்தியோகமாகிறது. இன்னும் ஒருவர் ஒரு செயலில் ஈடுபடும்போது, ஒரு வேலையைச் செய்யும் போது அதில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அவ்வேலையைச் செய்யும் போது, மனத்தெளிவும், அறிவுத் தெளிவும், அத்தொழில் பற்றிய முழுமையான ஞானத்துடன் உணர்வு பூர்வமாகச் செய்வதும் அப்பணியைச் செய்து முடிப்பதும் ஞான யோகமாகிறது.

அவ்வாறு அரங்கன் யோகத்தில் மோனத்தில் ஆழ்ந்திருப்பதை, உறக்கமாகக் கருதி, தம் சாதாரண மக்களுடைய கருத்தைத் தனது கருத்தாகக் கொண்டு, இரவு கழிந்து விட்டது, இரவி எழுந்து விட்டான். உலகமெல்லாம் ஒளி பரவிவிட்டது, பறவைகள் விழித்தெழுந்து பாடிக் களித்து பறக்கத் தொடங்கிவிட்டன. பயிர் பச்சை, செடிகொடி மரங்கள் எல்லாம் தூக்கத்திலிருந்து எழுந்து அசையத் தொடங்கி விட்டன. மலர்கள் எல்லாம் மலர்ந்து மணம் வீசத் தொடங்கி விட்டன. மக்கள் எல்லாம் எழுந்து நடமாட செயல் படத்தொடங்கி விட்டார்கள். குழந்தைகள் எல்லாம் எழுந்து, ஒடியாடி விளையாடத் தொடங்கிவிட்டன. ஆடு மாடுகளும் எழுந்து புறப்பட்டு விட்டன. இவையனைத்தின் குரல்களும் ஒசைகளும், ஒலிகளும் ஆகாயமெங்கும் பரவி பெரும் சத்தம் கிளம்பத் தொடங்கி விட்டது. இன்னும் நீ தூக்கத்தில் இருந்தால், அனைத்தையும் இயக்கும்