பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. பள்ளியெழுச்சிப் பாடல்கள்

74


நிலையில் விடுதலை இயக்கத்தில் மக்களை மேலும் அதிகமாக ஒன்று திரட்ட வேண்டும். அதற்காக மக்களை மேலும் அதிகமாக விழிப்படையச் செய்ய வேண்டும். அதற்காக பாரத மக்களை பாரத அன்னை வடிவத்தில் காணும் பாரதி, தூக்கத்திலிருந்து அறியாமை இருளிலிருந்து வெளியேறி, விடுதலை ஒளியில் வந்து குவியும்படி மக்களைத் தட்டி எழுப்புகிறார்.

வாழையடி வாழையாக வந்த திருக் கூட்டத்தின் தொடர்ச்சியாக ஆழ்வார்களின் பக்தி வடிவைப் பின்பற்றி அதைத் தனதாக்கிக் கொண்டு பாரதி, பாரத மாதாவைத் தமிழ் மொழியில் பாடித்தட்டி எழுப்புகிறார்.