பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

4



மகிழ்ச்சியான வாழ்க்கை, கலி நீங்கல் முதலியவைகளையெல்லாம் திருமால் வழிபாட்டுடன் இணைத்துப் பாடினார்கள்.

திருமால் அவதாரங்களில் கிருஷ்ணாவதாரம் பரி பூரணாவதாரமாகும். கண்ணனுடைய அருஞ்செயல்கள் அனைத்தையும் புகழ்ந்து பாராட்டி ஆழ்வார்கள் அழகுறப் பாடினார்கள்.

பாரதக் கலாச்சாரமும், பண்பாட்டு தளமும் பக்திப் பேரியக்கத்தின் காரணமாக புதிய பொலிவு பெற்று விரிவடைந்தது. ஆலயங்களும், புண்ணிய தீர்த்தங்களும், புதிய வழிபாடுகளும் பெருகி பாரத நாடு புதிய தோற்றத்தைக் கொண்டு எழுச்சி பெற்றது.

பாரத நாட்டின் அடுத்த வரலாற்றுக் காலத்தில் முஸ்லிம் படையெடுப்புகளினால் எண்ணற்ற பல சேதங்களும், நாசங்களும் அழிவுகளும் ஏற்பட்டன. பாரத நாட்டுச் செல்வங்கள், கோயில்கள், ஆலயங்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து ஐரோப்பியர் படையெடுப்புகளும் ஆங்கிலேயர் ஆட்சியும் அந்த அன்னிய ஆட்சியால் இந்திய வரலாற்றில் எப்போதும் கண்டிராத அளவில் பாரத நாட்டில் பெரும் சேதங்களும் பெரு நாசங்களும் பேரழிவுகளும் ஏற்பட்டன. கணக்கில்லாத அளவில் இந்தியச் செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டன, சூரையாடப்பட்டன. ஆங்கிலேய ஆட்சியின் கொள்ளையைப் பற்றி பாரதி “பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ நாங்கள் சாகவோ” என்று மனமுருகப் பாடினார்.

அன்னிய ஆட்சிகளோடு சேர்ந்து பாரதக் கலாச்சாரத்திற்கு எதிரான கலாச்சார ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டன. இந்திய மக்களின் ஏழ்மை அதிகரித்தது. ஏழைகளாக, பஞ்சைப் பராரிகளாக, கூலிகளாக, அடிமைகளாக, கொத்தடிமைகளாக, அன்னிய