பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

79


திருப்பாணாழ்வார் உறையூரில் செந்நெற்பயிரில் அவதரித்தார். பிறவாது பிறந்த அக்குழந்தையை பஞ்சமர் சாதியில் பிறந்த பாணர் ஒருவர் எடுத்து வளர்த்தார். பாணர் வளர்த்ததால் திருபாணாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

திருப்பாணாழ்வார் அரங்கநாதர் மேல் பாடல்கள் பாடிக் கொண்டு தொண்டு செய்யும் எண்ணத்துடன், தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்தவராதலால் ஆற்றைத்தாண்டித் திருவரங்கத்திற்குள் செல்லாமல் காவிரியாற்றின் தென் கரையில் நின்று கொண்டே அரங்கன் கோயிலை நோக்கித் தொழுது கொண்டே யாழ் வாசித்துப் பாடி மகிழ்ந்தார். நாள் தோறும் அவர் திருவரங்கனை நோக்கி, மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார். ஒருநாள் திருவரங்கநாதனை ஆராதிப்பவரான உலோக சங்கர முனிவர், காவிரியில் நீராடிவிட்டு, திருமண் அணிந்து கொண்டு, துளவமாலை, தாமரை மணி மாலைகள் அணிந்து கொண்டு, திருவரங்கநாதன் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு செல்லக் குடத்தைக் கையிலேந்திக் கொண்டு வந்த போது, திருப்பாணரை எதிரில் கண்டு கை தட்டிக் கூவி அப்பாற்செல் என்று சாதியைக் குறிப்பிட்டு சத்தம் கொடுத்தார். திருப்பாணர் மெய்மறந்து நின்று பாடிக் கொண்டிருந்தமையால் முனிவர் கூறியதை கவனிக்கவில்லை. முனிவர் கோபங்கொண்டு ஒரு கல்லை எடுத்துப் பாணர் மீது எரிந்தார். கல் பாணருடைய நெற்றியில் பட்டு காயமடைந்து ரத்தம் கசியத் தொடங்கியது. அப்போது பாணர் உணர்வு பெற்று விழித்தபோது முனிவர் எதிரில் நிற்பதைக் கண்டு பதைத்து அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டார். --

உலோக சாரங்க முனிவர் குடத்தில் நீர் எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றபோது அரங்கநாதன் நெற்றியில் காயமுற்று இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. காரணம் அறியாமல் முனிவரும் அா்ச்சகர்களும் வருந்தினர். அரசனிடம் முறையிட்டனர். விசாரணை நடத்தியும் விடை கிடைக்கவில்லை. அந்நாளில் இரவில் உலோக