பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

80


சங்கரருடைய கனவில் அரங்கநாதர் தோன்றி திருப்பாணரை இழிகுலத்தவர் எனக் கருதாமல் உம்முடைய தோள் மீது அமரச் செய்து என் முன்பாகச் சந்நிதிக்குள் கொண்டு வரும் படி கூறினார்.

முனிவர் கண் விழித்துக் கனவை நினைத்து, கடவுளின் கட்டளையை நிறைவேற்றக் காவிரியின் தென் கரைக்கு வந்து, திருப்பாணாழ்வாரைக் கண்டு அவரைக் கோவிலுக்குள் வரும்படி அழைத்தார். திருப்பாணாழ்வாரோ, நான் நீச குலத்தில் வளர்ந்தவனாகையால் கோவிலுக்குள் வர இயலாது என்று கூற, முனிவரும் அர்ச்சகர்களும் அவரைத் தொட்டுத் தூக்கி முனிவரின் தோள்களில் அமரச் செய்து, கோயிலுக்குள் கொண்டு சென்று அரங்கநாதன் முன் நிறுத்தினர். அரங்கநாதன் நெற்றியில் இருந்த காயம் மறைந்து விட்டது. இவ்வாறு சிறப்பான முறையில் அரங்கனே அருள் கொண்டு பாணரின் ஆலயப் பிரவேசம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சி வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.

திருப்பாணர் அரங்கனை உச்சி முதல் உள்ளங்கால் வரை கண்டு களித்து பாட்டுக்கள் பாடி திருபாணாழ்வார் என்று பெயர் பெற்று விளங்கினார் என்பது ஆழ்வார்களின் வரலாற்றுச் செய்தியாகும்.

திருப்பாணாழ்வார், யாழ் மீட்டி, பண் இசைத்து அழகிய பத்து பாடல்கள் பாடியுள்ளார். அவை நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் பகுதியாக உள்ளது.

"அமலனாதிபிரான் அடியார்க்
கென்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன் விரை
யார் பொழில் வேங்கடவன்