பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

82


நாலாயிரம் பாசுரங்களைப் பாட முடியாவிட்டாலும் திருமாலையாகிய நாற்பத்தைந்து பாசுரங்களைப் பாடினால், அது நாலாயிரம் பாசுரங்களைப் பாடியதற்கு ஈடாகும் என்பது வைணவப் பெருமக்களின் நம்பிக்கை.

தொண்டரடிப் பொடியார் பிராமண குலத்தில் பிறந்தவராயினும், திருமால் அடியார்கள் எக்குலத்தவராயினும் அவர்கள் நம் குலத்தோரே என்றும், அதே சமயம் சாதி அந்தணர்களாயினும் அரங்கனைப் பழித்தால் அவர்கள்தான் புலையராகும் என்று பாடினார்.

“பழுதிலா ஒழுகலாற்றுப்
பல சதுப்பேதிமார்கள்
இழிகுலத்தவர்களேனும்
எம்மடியார்களாகில்
தொழுமினீர் கொடுமின் கொள்மின்
என்று நின்னோடுமொக்க
வழிபட அருளினாய் போன்
மதிள்திருவரங்கத்தானே.”

என்றும்,

"அமரவோ ரங்கமாறும்
வேதமோர் நான்கும் ஓதி
தமர்களில் தலைவராய
சாதி அந்தணர்களேனும்
நுமர்களைப் பழிப்பாராகில்
நொடிப்பதோரளவில், ஆங்கே