பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

83


அவர்கள்தாம் புலையர் போலும்,
அரங்காமா நகருளானே”

என்றும் தெளிவான அழகு தமிழில் இனிமையாகப் பாடியுள்ளார்.

கண்ணபிரான், “மனிதருள் சாதி வேற்றுமையும் அறிவு வேற்றுமையும் பார்க்கக் கூடாது என்பது மட்டுமன்றி எல்லா உயிர்களுக் கிடையிலும் வேற்றுமை பார்க்கலாகாது” என்பதை வலியுறுத்திக் கூறுவதைப் பாரதி எடுத்துக் கூறியுள்ளதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

திருமங்கையாழ்வார் தனது பெரிய திருமொழியில் பாடியுள்ள திருவரங்கனைப் பற்றிய பாசுரங்களில், ஏழை ஏதலன் என்று தொடங்கி, துளங்கு நீண்முடி என்று தொடங்கும் ஒன்பது பாடல்களிலும், அரங்கன், சாதி வேற்றுமையும் உயிரின வேற்றுமையும் பாராமல் அனைவருக்கும் அருள் புரிந்துள்ளதை மிகவும் அற்புதமாகப் பாடியிருப்பதைக் காண்கிறோம்.

குகனைத் தோழமை கொண்டவன் என்றும், வானரத்தைத் துணையாகக் கொண்டு, அவர்களுடன் சேர்ந்து உணவு உண்டவன் என்றும், கஜேந்திரனைக் காப்பாற்றியவன் என்றும், சுமுகன் என்னும் நாக குமாரனைக் காத்தவன் என்றும் கோவிந்தசாமி என்னும் அந்தணனையும் மார்க்கண்டேயனையும், மற்றும் சாந்தீபினி வைதிகன், தொண்டை மன்னன் ஆகியோருக்கும் எந்த விதமான வேற்றுமையும் பாராட்டாமல் அருள்புரிந்தாய் என்றும் ஆழ்வார் அருமையாகப் பாடுகிறார்.

"ஏழை ஏதலன் கீழ் மகன் என்னா
திரங்கி மற்றவர்க்கின்னருள் சுரந்து
மாழைமான் மாட நோக்கியுன் தோழி
உம்பி எம்பி என்றொழிந்திலை, உகந்து