பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

84


தோழன் நீயெனக்கிங்கொழி என்ற
சொற்கள் வந்தடியேன் மனத்திருந்திட
ஆழ்வண்ண நின் அடியிணையடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மானே"

என்பது ஆழ்வாரின் முதல் பாசுரம்.

குகனிடத்தில் எந்தவிதமான சாதிப்பாகுபாடும் காட்டாமல் அவனைத் தன் சகோதரன் எனத்தழுவி, சீதையைக் காட்டி, இவள் உன் கொழுந்தி என்றும், இலக்குவனைக் காட்டி இவன் உன் தம்பி என்றும் கூறியதை நினைவுபடுத்தி அதே போல் என்னையும் நீ ஆட்கொள்வாயாக என்று ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.

" வாதமா மகன்மர்க்கடம் விலங்கு
மற்றோர் சாதியென் றொழிந்திலை உகந்து,
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்த தகவினுக்கில்லை கைம்மாறென்று
கோதில் வாய்மையினாயொடு முடனே
உண்பன் நான் என்ற ஒண்பொருள் எனக்கும்
ஆதல் வேண்டுமென்றடியிணை யடைந்தேன்
அணிபொழில் திருவரங்கத்தம்மாளே!

என்று ஆழ்வார்ப் பாடுகிறார்.

வாயுவின் புத்திரனான அனுமனை வேறு சாதி என வேறுபாடு காட்டாமல் அன்புப் பெருக்குடன் கட்டித் தழுவிக் கொண்டு உனக்குக் கைம்மாறு என்ன செய்வேன் எனக்கூறி அனுமனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டதைப் போல என்னையும்