பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

85


உன்னுடன் இணைத்துக் கொள்ள அருள்புரிய வேண்டும் என்று அரங்கனை ஆழ்வார் வேண்டுகிறார்.

“குகனோடு ஐவர் ஆனோம் முன்பு
பின்குன்று சூழ்வான்
மகனோடு அறுவர் ஆனோம் எம்உழை
அன்பில் வந்த
அகன் அமர் காதல் ஐய, நின்னொடும்
எழுவர் ஆனோம்,
புகல் அரும்கானம் தந்து புதல்வரால்
பொலிந்தான்நுந்தை”

என்று இராமபிரான் குகனையும் சுக்கிரீவனையும் வீடணனையும் குல வேற்றுமை பாராட்டாமல் உடன்பிறந்தோராகப் போற்றியது இங்கு நினைவு கூறத்தக்கது.

அத்துடன் அனுமனை இராமன் கட்டித்தழுவி,

"மாருதி தன்னை ஐயன்மகிந்து இனிது
அருளின் நோக்கி
ஆர் உதவிடுதற்கு வுத்தார் நீ அலால்
அன்று செய்த
பேர் உதவிக்குயான் செய்செயல் பிறிது
இல்லை பைப்பூண்
போர் உதவிய திண்தோளாய் பொரு
ந்துறப்புல்லு கென்றான்”

என்னும் கம்பனுடைய சிறந்த கவிதை வரிகளும் இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.