பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

5


ஆட்சியாளர்களால் இந்திய நாட்டு ஏழை மக்கள் உலகின் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டார்கள்.

பாரத நாட்டின் அரசியல் சுதந்திரம் பரிபோயிற்று. பொருளாதாரத்துறையில் நமது ஏழ்மையும் வறுமையும், வேலையின்மையும், பெறுகின. செல்வமும் செழிப்பும் சீரழிந்தது. பாரத நாட்டின் பாரம்பரியக் கலாச்சாரத்தின் மீது பெரும் தாக்குதல் நிகழ்ந்தது.

கல்வியும் கலாச்சாரமும் சீரழிந்து, கல்லாமையும், அறியாமையும், கண்மூடிப்பழக்கங்களும் அதிகரித்து புன்மை இருட்கணங்கள் பெருகின.

நமது ஆலயங்களும், புண்ணிய தீர்த்தங்களும் நீர் நிலைகளும் சேதங்கள் அடைந்து பொலி விழந்தன.

அந்த நேரத்தில் நமது தெய்வங்களின் சக்தியாலும், நமது முன்னோர் செய்த புண்ணியத்தாலும், நமது சத்திய தர்மத்தாலும், பாரத நாட்டின் பல சான்றோர்கள், சத்திய சீலர்கள் தேசபக்த வீரர்களின் கடும் தியாகத்தாலும் முயற்சிகளாலும் பாரத நாட்டில் ஒரு புதிய ஆதர்சம் தோன்றியது. ஒரு புதிய மார்க்கம் தோன்றியது. தேசபக்தி என்னும் புதிய மார்க்கம் தோன்றி புதிய ஒளியைப் பரப்பியது.

எண்ணற்ற பாரதிகள் தோன்றினார்கள். தமிழகம் செய்த தவப்பயன், பாரதம் செய்த புண்ணியம் மகாகவி சுப்ரமணிய பாரதி தென்னாட்டில் தோன்றினார். வாழையடி வாழையாகத் தோன்றிய பாரத நாட்டு மகான்களின் வரிசையில் பாரதி தோன்றித் தனது கவிதைகளைப் பாடினார்.

மகாகவி பாரதியின் கவிதைகளிலும் கட்டுரைகளிலும் கதைகளிலும், எழுத்துரைகளிலும் தேச பத்தியும், சமுதாய முன்னேற்றமும் தான் உயிர் நாடியாகவும் உயிர் முச்சாகவும் இருந்தது.