பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

87


அறுபதம் முரலும் கூந்தல் காரணம்
ஏழ்விடையடங்கச் செற்றனை அறுவகைச்
சமயமும் அறிவரு நிலையினை ஐம்பால்
ஓதியை ஆகத்திருத்தினை, அறமுதல்
நான்கவையாய் மூர்த்தி மூன்றாய்
இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை”

என்று குறிப்பிடுகிறார்.

நாலுவகை வருணங்களும், ஐம்பெரும் பூதங்களும், அறுவகைச் சமயங்களும் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்காயும் மூன்று மூர்த்திகளாயும், இருவகைப் பயன்களாகவும், அனைத்தும் ஒன்றாக நின்றாய் என்று திருமாலைக் குறிப்பிடுகிறார். இதில் நால்வகை வருணங்களும் ஒன்று என்னும் கருத்தை ஆழ்வார் வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண்கிறோம்.

சாதி வேற்றுமைகளையும் சாதிப் பாகுபாடுகளையும் பாராமல் அனைவரும் ஒன்று என்னும் கொள்கைகளில் ஆழ்வார்கள் அழுத்தமாக நின்றார் என்பதைக் காண்கிறோம்.

மகாகவி பாரதி சாதிப் பாகுபாடுகளையும், வேறுபாடுகளையும் சாதி அமைப்பையும் கடுமையாகச் சாடினார். நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தினார் வந்தேமாதரம் பாடலில்,

"சாதிமதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத்தேசத்தில் எய்தின ராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே”

என்று எடுத்த எடுப்பிலேயே குறிப்பிடுகிறார்.