பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீக்கி மக்களை ஒன்றுபடுத்தும் பணியில்

88


“பாரத தேசம்’ என்னும் பாடலில்,

“சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்குதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்”

என்று ஒளவையின் தொடர்ச்சியாகப் பாடுகிறார்.

“சாதி இரண்டொழிய வேறில்லை” என்பது ஒளவையார் கூறிய வாசகம். அதையே பாரதி "தமிழ் மகள் சொல்லிய சொல்” என்று குறிப்பிடுகிறார். அந்தச் சொல்லை அமிழ்தம் என்று கூறுகிறார். நேர்மையானவர்கள் மேலோர், மற்றவர்கள் எல்லாம் கீழோர் என்று ஒளவையின் வழியில் தொடர்கிறார்.

“சாதி நூறு செல்லுவாய் போ, போ, போ” என்று போகின்ற பாரதத்தை விரட்டுகிறார். "எல்லோரும் ஒர்குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள்” என்று பாரத சமுதாயத்தைப் பற்றி மிகவும் உயர்வாகக் குறிப்பிடுகிறார்.

இந்திய தேசீய விடுதலை இயக்கத்தின் கோரிக்கையாகப் பரிபூரண சுதந்திரம் என்பது, 1920 ம் ஆண்டுகளில் இந்திய தேசீயக் காங்கிரஸில் ஒரு விவாதப் பொருளாக இருந்தது. வீர சவர்க்கார், சிங்காரவேல் செட்டியார் முதலியவர்கள் பரிபூரண சுதந்திரம் என்னும் தீர்மானங்களை முன் வைத்தார்கள். மகாத்மா காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் பரிபூரண சுதந்திரம் என்னும் தீர்மானத்தை எதிர்த்தார்கள். அதாவது மாட்சிமை பொருந்திய மன்னர்பிரானின் ஆட்சியிலிருந்து பிரிந்து செல்வது என்பதை எதிர்த்து, இந்திய நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு ஈடாக இந்தியர்களுக்கு சம உரிமை வேண்டும் என்றே கூறிவந்தார்கள். அந்த நேரத்தில் முழுமையான