பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

91


நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர் ”

என்று எதிர்காலத்திற்குச் சரியான வழியைக் காட்டுகிறார்.

சாதி அமைப்புகளும் அதில் வேறுபாடுகளும் பாகுபாடுகளும் கொடுமைகளும் எப்போது தோன்றியதோ, அப்போதிருந்தே அவைகளுக்கு எதிர்ப்பும் எதிர்க் கிளர்ச்சிகளும் தோன்றியிருக்கின்றன. சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக, உயர்வு தாழ்வுக் கொள்கைகளுக்கு எதிராகக் கடுமையான சண்டைகளும் மோதல்களும் ஏற்பட்டிருக்கின்றன. பின்னர் அப்பிரச்சனைகளில் சமரசங்களும் உடன்பாடுகளும் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கான பல சான்றுகளையும் நமது இலக்கியங்களிலும் வரலாற்று நிகழ்ச்சிகளிலும் நாம் காணலாம்.

விஸ்வாமித்திரருக்கும் வசிட்டருக்கும், ஏற்பட்ட மோதல் சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் என்பது சரித்திரப் பிரசித்தம். அந்த மோதலின் இறுதியில் சத்திரியர்களின் வலுவை அங்கீகரித்து “வாராய் பிரம்மரிஷி” என்று வசிட்டர் விசுவாமித்திரரை வரவேற்றும் இருவருக்குமிடையில் சமரசமும் உடன்பாடும் ஏற்படுகிறது என்பதை நமது இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

அதுபோல பரசுராமனுக்கும் இராமனுக்கும் ஏற்பட்ட சந்திப்பு ஒரு யுக சந்தியாகும். மிதிலையில் சிவதனுசுவை முறித்து, சீதையை மணம் முடித்து, இராமன் தனது தந்தையுடனும் பரிவாரங்களுடனும், அயோத்தி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பரசுராமன் எதிர் வந்தான். உன் வலுவைக் காண வேண்டும் என்று இராமனிடம் சவால் விடுகிறான்.

தசரதன் பயந்து நடுங்கி, புவனம் முழுவதும் வென்றொரு