பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4.சாதி வேறுபாடுகளை நீகக் மககளை ஒனறுபடுததும பணியல்

92


முனிவற்கு ஈந்தாய் அருள் புரிவாய், சிவனும் அரி அயனும் அலர் சிறுமானிடர் பொருளோ இவனும் (இராமனும்) எனது உயிரும் உனது அபயம் என்று பரசுராமனிடம் சரணடைந்தான்.

அப்போது பரசுராமன் “உலகெலாம் முனிவற்கு ஈந்தேன், உறுபகை ஒடுக்கிப் போந்தேன், அலகில் மாதவங்கள் செய்து ஒர் அருவரை இருந்தேன்” அப்போது நீ மிதிலையில் சிவதனுசை ஒடித்த சப்தத்தைக் கேட்டேன். அது ஏற்கனவே முறிந்தவில், இதோ என்னிடம் உள்ளது விஷ்ணுதனுசு இதை எடுபார்க்கலாம்” என்று இராமனிடம் சவால்விட்டான். பரசுராமன் பிராமணன். இராமன் சத்திரியன், இராமன் புன்முருவல் செய்து, “நாரணன் வலியின் ஆண்ட வென்றிவில் தருக" என அவ்வில்லை வாங்கி வளைத்தான் சவால் விட்ட பரசுராமனிடம், “பூதலத்தரசையெல்லாம் பொன்றுவித்தனை, என்றாலும், வேதவித்தான மேலோன்மைந்தன் நீ, விரதம் பூண்டவனும் கூட, ஆதலின் உன்னைக் கொல்லல் ஆகாது” ஆயினும் “எனது அம்பிற்கு இலக்கு கூறுக எனக்கேட்டு” எய்த அம்பு இடை பழுது எய்திடாமல் பரசுராமனுடைய தவம் அனைத்தையும் குறியாகக் கொண்டு வாரிக் கொண்டு போய் மீண்டது. பரசுராமன் வலுவிழந்து நின்றான். இராமன் வெற்றி பெற்றான்.

“ எண்ணிய பொருளெல்லாம் இனிது முற்றுக, புண்ணிய விடை" என்று கூறி பரசுராமன் இராமனிடம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். இது கம்பர் தரும் அருமையான காட்சியாகும்.

இத்தகைய மோதல்கள் பலவற்றை இந்திய வரலாற்றில் இதிகாசக் கதைகளில் பலவற்றைக் காணலாம். மகாபாரதக் கதையில் கர்ணன் கதை முழுவதுமே சாதிக் கொடுமையை எதிர்த்து நடத்திய போராட்டமேயாகும்.