பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 ஆழ்வார்கள் காலநிலை நெடுமாறனேயன்றி அவன் மகனாகிய நெடுஞ்சடையன் ஆகான் என்பது நன்கு பெறப்படும், படவே, ஆழ்வார் நடத்திய சமயவாதம் தநதைநெடுமாறன் காலத்து நிகழ்ச்சியாக வேண்டும் என்றும், அவனே நம் பெரியார்க்கு முதலில் அடியவனாயினன் என்றும், சைவனாயிருந்து பின் அடியனாயின அப்பாண்டியனைப்போலாது, அவன்மகன் ஆழ்வாரது சார்பால் முழு வைஷ்ணவாைகவே விளங்கினமையால் f.பரம வைஷ்ண வன் தானாகி நின்றிலங்கும்....... நெடுஞ் சடையன்” என்று சிறப்பிக்கப்பெற்றனன் என்றும் நாம் கருதக்கூடியவாயுள்ளன.1 1. பராந்தகன் - நெடுஞ்சடையனது 3-ஆம் ஆட்சி வருஷத் தமைந்த வேள்வி குடிச்சாஸனத்தின் தொடக் கத்தில் சிவ வணக்கம் காணப்படுதலால் அவன் முதலில் சைவனாயிருந்து பின் வைஷ்ணவனான வன் என்பர் சிலர். ஆயின், பரமவைஷ்ணவனானபின் இவனது 17-ஆம் ஆட்சி யாண்டில் அமைந்த சீவரமங்கல சாஸனத்தில் விஷ்ணு வணக்கமேயன்றோ காணப்பட வேண்டும்? அவ்வாறன்றிச் சிவவணக்கமும் அதன் தொடக்கத்துக் கூறப்பட்டுள்ளமை யால் அவர்கூற்றுப் பொருந்தாதாகும். சாஸனங்களில் பிரசஸ்தி எழுதும் கவியின் மனக் கொள்கைக் கேற்ப, திரிமூர்த்திகளில் ஒருவர்க்கோ பலர்க்கோ முதலில் வணக்கங்கூறப்படுதல் பழைய வழக் காகும். அதனைத் தாம் கொண்ட மதச்சார்புக்கேற்ப அரசர் கட்டுப்படுத்தியவரல்லர். நெடுஞ்சடையன்போலப் பரமவைஷ்ணவனான பல்லவ மல்லன் சாஸனங்களினும், பிரசஸ்தி எழுதிய கவியால் சிவ வணக்கம் தொடங்கப்பட்டிருத்தலைக்காணலாம். ஆகவே, சாஸனத் தொடக்கமான தெய்வத்துதிகளைக் கொண்டு, அரசர் மதங்களை அளவிடல் தவறாமென்க.